குளிர்பானம் என நினைத்து பூச்சி மருந்தை குடித்த சிறுவன் பலி - கோவையில் நடந்த சோகம்!

கோவையில் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குளிர்பானம் என நினைத்துக் குடித்த 5 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை சீரநாயக்கன்பாளையம் திலகர் வீதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 32). இவருக்கு திருமணமாகி தர்ஷித் என்ற ஐந்து வயது மகன் இருந்தார். பிரகாஷ் தனியார் மருந்தக நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், கடந்த 20 ஆம் தேதி தர்ஷித்துக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுவனிடம் பிரகாஷ் கேட்டபோது, வீட்டில் இருந்த குளிர்பான பாட்டில் ஒன்றை காட்டி அதை குடித்ததாக தெரிவித்துள்ளார். அதை பிரகாஷ் சோதனை செய்தபோது அந்த பாட்டிலில் கரப்பான் பூச்சியை கொள்வதற்கான பூச்சிமருந்து இருந்தது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த பிரகாஷ், சிறுவனை 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்த தர்ஷித், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆர் எஸ் புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் இருந்த கரப்பான் பூச்சி மருந்தை குளிர்பானம் என நினைத்து குடித்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...