கோவையில் சிறப்பு மருத்துவ முகாம் - ஆர்வத்துடன் பங்கேற்ற பொதுமக்கள்!

கோவை பெரியநநாய்க்கன் பாளையம் பகுதியில் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயம் மற்றும் கே.எம்.சி.ஹெச் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய சிறப்பு மருத்துவ முகாமில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பரிசோதனை செய்துகொண்டனர்.



கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள புதுப்புதூர் பகுதியில் ராமகிருஷ்ணா இயக்கத்தின் 125 வது ஆண்டு விழா மற்றும் 75வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயம் மற்றும் கேஎம்சிஹெச் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து பொது மற்றும் காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவ முகாமை நடத்தியது.



அங்குள்ள கனரா வங்கி வளாகத்தில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு மருத்துவ முகாமில், சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று பரிசோதனை செய்துகொண்டனர். இந்த முகாமில், வெளி நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனை, பரிசோதனைகள் மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன.



உள் நோயாளிகளாக பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைகள் குறைந்த கட்டணத்தில் மேற்கொள்ளப்பட்டது. இந்த சிறப்பு மருத்துவ முகாம் மூலம் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பயனடைந்ததாக முகாம் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...