கோபி அருகே வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய பாஜக பிரமுகர் கைது

கோபிசெட்டிப்பாளையம் அருகே தன் வீட்டின்மீது தானே பெட்ரோல் குண்டை வீசிய பாஜக பிரமுகரால் பரபரப்பு.


ஈரோடு: பாஜக பிரமுகர் வீட்டின் மீது அதிகாலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள சவண்டப்பூர் கணபதிபாளையத்தைச் சேர்ந்தவர் சண்முகம்(47). கூலித் தொழிலாளியான இவர், பிரதமர் மோடி பாசறையின் கோபி சட்டமன்றத் தொகுதி நிர்வாக குழு உறுப்பினராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்துடன் வீட்டில் தூங்கி உள்ளார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் வீட்டுக்கு வெளியே பயங்கர சத்தம் கேட்டது. இதையடுத்து அவர்கள் வீட்டின் கதவைத் திறந்து வெளியே வந்து பார்த்தனர். அப்போது பெட்ரோல் குண்டு ஒன்று வீட்டின் வெளிப்புறத்தில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

மேலும் அதன் அருகே மற்றொரு பெட்ரோல் குண்டு வெடிக்காமல் கிடந்ததையும் கண்டனர். இந்த சம்பவம் குறித்துக் கோபி போலீசாருக்கு உடனே தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெடிக்காமலிருந்த பெட்ரோல் குண்டை கைப்பற்றி விசாரித்தனர்.

பின்னர் மோப்பநாய் வீரா சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. சம்பவ இடத்திலிருந்து மோப்பம் பிடித்தபடி நாய் சண்முகத்தின் வீட்டை மட்டுமே சுற்றி வந்தது. இதனால் சண்முகத்தின் வீட்டை போலீசார் சோதனை செய்தனர். அப்போது போலீசார் பெட்ரோல் குண்டு தயாரிக்கத் தேவையான திரியின் பாகங்கள் சண்முகத்தின் வீட்டிலேயே இருந்ததைக் கண்டுபிடித்து போலீசார் கைப்பற்றினர்.

இதனால் போலீசாருக்கு சண்முகம் மீது சந்தேகம் எழுந்தது. இதன் காரணமாக அவரை பிடித்து கிடிக்குப்படி விசாரணை நடத்தியில், சண்முகம் தனது வீட்டின் மீது தானே பெட்ரோல் குண்டு வீசியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...