கோவையில் மனிதநேய வாரவிழா கொண்டாட்டம் - செயல் விளக்கக் கண்காட்சி தொடக்கம்!

கோவையில் மனிதநேய வார விழா கொண்டாட்டத்தையொட்டி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள செயல் விளக்கக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் சமீரன் தொடங்கி வைத்தார்.


கோவை: தமிழ்நாட்டில் ஜனவரி 24ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை மனிதநேய வார விழா கொண்டாடப்படுகிறது.



இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இது குறித்தான செயல் விளக்க கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் சமீரன் தொட்ங்கி வைத்தார்.

இதில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை, செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் அரசு திட்டங்கள் தொடா்பான புகைப்படங்கள், சத்தான உணவு பொருட்கள், அவற்றின் நன்மைகள், விவசாயம் சார்ந்த குறிப்புகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

இன்று முதல் வரும் 30ம் தேதி வரை இக்கண்காட்சி நடைபெறவுள்ளது. இதன் ஒரு பகுதியாக, நாளை (ஜனவரி 25) கோவை கோட்ட அளவில் ஆதிதிராவிடா் நலத் துறை பள்ளிகள், விடுதிகள், கல்லூரி விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவா்களுக்கு நாட்டிய நாடகம், பேச்சுப் போட்டி, கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது.

ஜனவரி 26 ஆம் தேதி ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவா்கள் மூலம் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பட்டியல் இன மாணவா்கள் வசிக்கும் பகுதியில் மனமகிழ் நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.

ஜனவரி 27 ஆம் தேதி மதத் தலைவா்கள், பட்டியலின சான்றோா்கள் பங்கேற்கும் மத நல்லிணக்க கூட்டமும், நீதிபதிகள், காவல் துறையினா், வழக்குரைஞா்கள் பங்கேற்கும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த கருத்தரங்கமும் காவல்துறை சாா்பில் நடத்தப்படுகிறது.

ஜனவரி 28 ஆம் தேதி பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அனைத்துப் பள்ளிகளிலும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது. ஜனவரி 29 ஆம் தேதி சமுதாயத்தில் முன்னேற்ற நிலையில் உள்ள அரசு அலுவலா்கள், மருத்துவா்கள், பொறியாளா்கள், வழக்குரைஞா்கள், தொழில்முனைவோா்கள், அரசியல்வாதிகள் ஆகியோரைக் கொண்டு சமுதாய பொருளாதார முன்னேற்ற சிந்தனை கூட்டம் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் நடத்தப்படுகிறது.

ஜனவரி 30 ஆம் தேதி மனிதநேய வார விழா கொண்டாட்டத்தின் நிறைவு விழா கோவை பிஷப் அப்பாசாமி கல்லூரியில் நடைபெறுகிறது. அதில், விழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...