திருட்டு வழக்கில் குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த 2016ம் ஆண்டு நடந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


கோவை: கோயமுத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2016-ஆம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. இது தொடர்பாக, மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஹனீபா என்பவரது மகன் ஹக்கிம் என்ற டோரிஹக்கிம்(வயது35) என்ற நபர் மீது மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, மேட்டுப்பாளையம் போலீசார் அந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை மேட்டுப்பாளையம் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

அதன்படி, குற்றவாளி ஹக்கிம் என்ற டோரி ஹக்கிம்-க்கு 7ஆண்டு சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் அபராதமாக விதித்து நீதிபதிமன்றம் தீர்ப்பளித்தது. இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில்ஆஜர்படுத்திய நீதிமன்ற காவலர் உள்ளிட்டோரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பாராட்டினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...