கோவையில் அதிகம் ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பறிமுதல் - போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி

கோவை மாநகரில் பேருந்து மற்றும் பிற வாகனங்களில் பொருத்தப்பட்ட அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்த வட்டார போக்குவரத்து அதிகாரிகள்.


கோவை: மாநகரில் அதிக சத்தம் எழுப்பும் ஏர் ஹாரன்களை வாகனங்களில் பயன்படுத்திய வாகன ஒட்டிகளை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

கோவை மாநகர பகுதியில் வாகனங்களில் ஏர்ஹாரன் பொருத்தி அதிக சத்தம் ஏற்படுத்தி வருகிறார்கள். இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். இது தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க இணை போக்குவரத்து அதிகாரி சிவகுமரன், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சத்யகுமார், பாலமுருகன், சிவகுருநாதன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் விஜயகுமார், விஸ்வநாதன், செல்வதீபா, வேலுமணி, தனசேகர் மற்றும் அதிகாரிகள் கோவையில் அதிரடி ஆய்வில் மேற்கொண்டனர்.

இதில் 32 பேருந்துகள் மற்றும் பிற வாகனங்களில் அதிக ஒலியை எழுப்பக்கூடிய ஏர்-ஹாரன் பொருத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த வாகனங்களை ஓட்டி வந்தவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.



இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, வாகனங்களில் அதிக ஒலியை எழுப்பக்கூடிய ஏர்-ஹாரன் வைக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதையும் மீறி சில வாகனங்களில் இந்த ஹாரனை பொருத்தி பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த ஆய்வு தொடர்ந்து நடத்தப்படும். ஆய்வின்போது வாகனங்களில் ஏர் ஹாரன் இருப்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...