காரமடை செங்காம்பு கருவேப்பிலைக்கு புவிசார் குறியீடு? - ஆட்சியர் சமீரன் தகவல்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே காரமடை செங்காம்பு கருவேப்பிலைக்கு விரைவில் புவிசார் குறியீடு பெறப்படும் கோவை ஆட்சியர் சமீரன் தகவல்.


கோவை: மேட்டுப்பாளையம் அருகே தோட்டக்கலைத் துறை சார்பில் கருவேப்பிலை விவசாயத்தை மேம்படுத்தி, அதனை மதிப்புக் கூட்டுப் பொருட்களாக மாற்றம் செய்து குறித்த விவசாயிகளுக்குப் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் 50ஆண்டுகளுக்கும் மேலாகக் கருவேப்பிலை விவசாயம் நடைபெற்று வரும் நிலையில் இங்கு உற்பத்தி செய்யப்படும் செங்காம்பு கருவேப்பிலைக்கு உலக நாடுகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்தியாவில் உற்பத்தியாகும் கருவேப்பிலையில் 55 சதவிகிதம் அதாவது 1,240 ஹெக்டர் பரப்பளவில் காரமடையில் மட்டும் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் கருவேப்பிலை விவசாயம் அதிகமாக நடைபெறுவதால் விவசாயிகள் அதிக அளவில் லாபம் பெற அதனைப் பொடியாக மாற்றியும், எண்ணெய் எடுத்தல் உள்ளிட்ட மதிப்புக் கூட்டுப் பொருட்களாக மாற்றத் தோட்டக்கலைத் துறை மூலம் விவசாயிகளுக்குப் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த மேட்டுப்பாளையம் அருகே உள்ள தன்திருப்பதி நால்ரோடு பகுதியில் தனியார் மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ். சமீரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இதில் பெங்களூர் இந்தியத் தோட்டக்கலைத் துறை ஆராய்ச்சி நிலையத்தின் விஞ்ஞானிகள் பங்கேற்று விவசாயிகளுக்கு எந்த மாதிரியான உரங்களைப் பயன்படுத்துவது, பூச்சி கொல்லி மருந்தைத் தவிர்ப்பது மற்றும் உற்பத்தியைப் பெருக்குவது குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.



பின்னர் நிகழ்ச்சியில் பேசிய கோவை ஆட்சியர், காரமடை செங்காம்பு கருவேப்பிலைக்கு உலக தரக்குறியீடு பெற அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரபடுத்தபட்டுள்ளதாகவும், விரைவில் காரமடை செங்காம்பு கருவேப்பிலைக்கு புவிசார் குறியீடு பெறப்படும்.

நமது உணவில் தவிர்க்க முடியாத பொருளாக உள்ள கருவேப்பிலை பல்வேறு மதிப்புக் கூட்டுப் பொருட்களாக மாற்ற விவசாயிகளுக்கு அரசு சார்பில் மானியமும் அளிக்கப்பட உள்ளதாகக் கூறிய அவர், அதனை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவும் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக கருவேப்பிலை பொருட்கள் சம்பந்தமாக மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் கண்காட்சியினையும் ஆட்சியர் சமீரன் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் தோட்டக்கலைத் துறை துறை இயக்குநர் புவனேஸ்வரி, பள்ளேபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் மற்றும் திரளான விவசாயிகள் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...