கோவையில் கூட்டுறவுச் சங்கத் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம்

கூட்டுறவுச் சங்கத் தேர்தல்களை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் ஆணையம் சிறப்புற நடத்திட பார்வையாளர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது என தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையர் திருதயானந்த் கட்டாரியா தகவல்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கான மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், கூட்டுறவுச் சங்கங்களின் மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கான மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையர் திருதயானந்த் கட்டாரியா தலைமையில் நடைபெற்றது.



இதில் மாவட்ட ஆட்சியர் சமீரன், கூட்டுறவுச் சங்க தேர்தல் செயலாளர்/கூடுதல் பதிவாளர் செந்தில்குமார், கூட்டுறவுச் சங்கத்தின் இணை பதிவாளர் பார்த்திபன், கூட்டுறவு சங்க பதிவாளர் கண்ணப்பராஜா மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் இந்துமதி, துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபன மேலாண்மை இயக்குநர் சிவக்குமார், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய திருதயானந்த் கட்டாரியா, தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் மற்றும் 15 இதர செயற்பதிவாளர்களின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் மொத்தம் 23,149 அனைத்து வகை கூட்டுறவுச் சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் 2018ஆம் ஆண்டின் ஒட்டுமொத்த தேர்தலில் முதற்கட்டம் முதல் நிலையில் தேர்தல் முடிவற்று 02.04.2023 அன்று 5 ஆண்டுகள் பதவிக்காலம் முடிவுறும் சுமார் 4,684 சங்கங்களுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.



இவை தவிர, புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட சங்கங்கள், செயலாட்சியர் கட்டுப்பாட்டிலுள்ள சங்கங்கள் போன்று இதர வகை சங்கங்களுக்கும் ஆணையம் தேர்தல் நடத்தவுள்ளது. கூட்டுறவுச் சங்கங்களின் மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கான கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களுக்கான மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் இன்றைய தினம் நடத்தப்பட்டுள்ளது.

மேலும் முதற்கட்டத்தில் வரும் 23 மற்றும் 4 நிலைகளிலுள்ள சுமார் 13,784 சங்கங்களுக்கான 5 ஆண்டுகள் பதவிக்காலம் ஆகஸ்ட் 2023-ல் முடிவடைவதால் இவற்றுக்கு ஆகஸ்ட் 2023-ல் தேர்தல் நடத்தப்படும். கூட்டுறவுச் சங்கத் தேர்தல்களைச் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் ஆணையம் சிறப்புற நடத்திடப் பார்வையாளர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிச் சிறந்த முறையில் தேர்தல் நடைபெற ஒத்துழைக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...