தாராபுரத்தில் சாலையில் திடீரென விழுந்த மின்கம்பம் - போக்குவரத்து பாதிப்பால் அவதி!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகில் மின்கம்பம் உடைந்து சாலையில் விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.


திருப்பூர்: தாராபுரம் - அலங்கியம் ரவுண்டானா செல்லும் சாலையில் 3000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் இருந்த மின்கம்பத்தில் இன்பஅரசு, மற்றும் பிரகாஷ் ஆகியோர், ஏறி அருகில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட துணை ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்திற்கு மின் இணைப்பு வழங்குவதற்காக முயற்சித்துள்ளனர்.



அப்போது, திடீரென அந்த மின்கம்பம் உடைந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதில் கம்பத்தின் மேலே இருந்த இரண்டு பணியாளர்கள் கீழே விழுந்து காயமடைந்தனர். அந்தநேரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.



மின் கம்பம் சாய்ந்ததால், 500 மீட்டா் தொலைவுக்கு சாலையின் இரு புறங்களிலும் மின்சார ஒயா்கள் தொங்கிக் கொண்டிருந்தன.



இந்த சம்பவம் காரணமாக அந்தப் பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

மேலும் கீழே விழுந்த மின் பணியாளர்களை மீட்டெடுத்த அக்கம் பக்கத்தினர் ஆட்டோ மூலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



குடியிருப்புப் பகுதியில் நடப்பட்டிருந்த மின்கம்பம் திடீரென உடைந்து விழுந்ததால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...