உடுமலையில் தொழிலதிபர் வீட்டில் 120 பவுன் நகைக் கொள்ளை - மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தொழிலதிபர் வீட்டின் ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் 120 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசித் தேடிவருகின்றனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை காந்தி நகர் பகுதியில் வசித்து வருபவர் லட்சுமி நாராயணபதி. அட்டை பெட்டி தயாரிக்கும் கம்பெனி நடத்திவரும் இவர், நேற்று காலை குடும்பத்தினருடன் உறவினர் இல்ல விசேஷத்தில் கலந்து கொள்ள வெளியூர் சென்றுவிட்டார்.



நேற்று நள்ளிரவில் வீடு திரும்பியபோது, வீட்டின் ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்டு, பீரோக்களில் இருந்த பொருட்கள் சூறையாடப்பட்டிருந்தது கண்டு லட்சுமிநாராயணபதி அதிர்ச்சி அடைந்தார். இதனை தொடர்ந்து, உடுமலை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.



சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தியதில், வீட்டினுள் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 120 பவுன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கபட்டிருப்பது தெரியவந்தது.



கொள்ளை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த உடுமலை காவல்துறையினர், தனிப்படைகள் அமைத்து, மர்ம நபர்களை தீவிரமாகத் தேடிவருகின்றன்ர். தொழிலதிபர் வீட்டின் ஜன்னல் கம்பியை உடைத்து 120 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...