'அலுமினியம் ஏர் பேட்டரி மூலம் விரைவில் வாகன இயக்கம்..!' - இந்தியன் ஆயில் நிர்வாக இயக்குநர் தகவல்

அலுமினியம் ஏர் பேட்டரி மூலம் மின்சார உற்பத்தி செய்து வாகனங்களை விரைவில் இயக்க சாத்தியக்கூறு உள்ளதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குநர் அசோகன் தகவல்.



கோவை: அலுமினியம் ஏர் பேட்டரி மூலம் மின்சார உற்பத்தி செய்து கார் உட்பட வாகனங்கள் இயக்க ஆய்வுகள் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த பேட்டரிகளை வணிகமயமாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குநர் அசோகன் தெரிவித்துள்ளார்.



கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள பெரியகளந்தையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சொந்தமான இந்தியன் கேஸ் நிரப்பும் ஆலை உள்ளது.



இந்த ஆலையிலிருந்து கேஸ் சிலிண்டர்கள் கோவை, மதுரை, திருப்பூர் மாவட்ட மற்றும் கேரளா மாநிலம் கொழிஞ்சாம்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.



இந்த கேஸ் நிரப்பும் ஆலையில் இன்று தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநில நிர்வாக இயக்குநர் அசோகன் கலந்து கொண்டார்.



அப்போது கேஸ் நிரப்பும் ஆலையில் சிலிண்டரில் கேஸ் நிரப்பும்போது தீக்கசிவு ஏற்பட்டதாகவும், அங்கு இருந்த பணியாளர் தீ...தீ... என கத்தினார்.



உடனடியாக அங்கிருந்து சைரன் ஒழிக்கப்பட்டு கேஸ் நிரப்பும் ஆலையிலிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டு அங்குள்ள தானியங்கி குழாய்கள் மூலம் தண்ணீர் பீச்சி அடிக்கப்பட்டு தீயை அணைப்பது போல் செயல் விளக்கம் தத்துரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது.



இதன் பின்னர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநில நிர்வாக இயக்குநர் அசோகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,



தமிழ்நாட்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ரூ.2,800 கோடி செலவில் நேரடியாக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. விழுப்புரம் மாவட்டம் ஆசனூர் பகுதியில் பெட்ரோலியம் சேமிப்பு கிடங்கு காமராஜர் துறைமுகத்தின் பெட்ரோல் டீசல் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக டெர்மினல் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வசதிகள் உள்ளது. ரூ.921 கோடி மதிப்பில் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம். ஆசனூர் டெர்மினல் சுமார் ரூ.426 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

உலகிலேயே இரண்டாவது பெரிய ஆயில் உள்ளிட்ட சார்பு பொருட்களைத் தயாரிக்கும் ஆலையை மணலி அருகில் ரூ.1200 கோடி மதிப்பில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது .பிப்ரவரி 2024-க்குள் பயன்பாட்டுக்கு வரும்.

சரியான முகவரி ஆதாரம் இல்லாத சாலையோர வியாபாரிகள் மற்றும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு 5 கிலோ மற்றும் 10 கிலோ சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. குறைந்த விலையில் பைபர் மூலம் தயாரிக்கப்பட்ட ஐந்து கிலோ பத்து கிலோ அளவுகளின் சிலிண்டர்கள் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளோம்.

பெரியளவில் குழாய் மூலம் எரிவாயுவைக் கொண்டு செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறோம். சுமார் 1400 கிலோ மீட்டர் சென்னையிலிருந்து பெங்களூர் மற்றும் செங்கல்பட்டு முதல் பாண்டிச்சேரி, செங்கல்பட்டு முதல் தூத்துக்குடி வரை குழாய் 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளோம்.

இது மட்டும் இல்லாமல் சி.ஜி.டி எனப்படும் நகரங்களுக்குள் குழாய் மூலம் எரிவாய்வு விநியோகம் செய்யும் திட்டத்தை 11 மாவட்டங்களுக்குச் செயல்படுத்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது.

இதில் அடுத்த 8 வருடங்களில் 7 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளோம் .பெட்ரோலியம் சார்பாக திட்டங்கள் மற்றும் இஸ்ரேல் நிறுவனத்துடன் கூட்டாக அமைக்கப்படும் புதிய ஆலை என சுமார் ரூ.15ஆயிரம் கோடி மதிப்பில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது.

எதிர்காலத்தையும் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறோம். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், இஸ்ரேலிய நிறுவனத்தின் சேர்ந்து கூட்டு முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இதில் அலுமினியம் ஏர் பேட்டரிகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம் அலுமினியம் ஏரைப் பயன்படுத்திச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

இதன் மூலம் கார் மற்றும் வாகனங்களை இயக்குவதற்கான பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது. இதை வணிகரீதியாகப் பயன்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பயன்படுத்தப்பட்ட அலுமினியத்தை மீண்டும் மறுசுழற்சி முறையில் பயன்படுத்துவதால், இந்த அலுமினியம் பேட்டரியை மீண்டும், மீண்டும் மறுசுழற்சி முறையில் பயன்படுத்தும் போது உற்பத்தி செலவு குறைக்கப்படுகிறது.

இவ்வாறு, அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...