உதகை தாவரவியல் பூங்காவில் புகைப்பட கண்காட்சி - அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்பு

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியினை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பார்வையிட்டார்.


நீலகிரி: உதகை அரசு தாவரவியல் பூங்காவில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் "ஓயா உழைப்பின் ஓராண்டு" என்ற தலைப்பில் 10 நாட்கள் புகைப்படக் கண்காட்சி நடைபெறுகிறது.



நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழர்களின் கனவுகளைத் தாங்கி என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி 10 நாட்கள் நடைபெறுகிறது.



இந்த கண்காட்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் பார்வையிட்டார். அவருடன் மாவட்ட ஆட்சியர் அம்ரித் உள்ளிட்டோர் இருந்தனர். புகைப்படக் கண்காட்சியில் சுற்றுலாத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, உணவுப் பாதுகாப்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் சமூக நலத்துறை, மகளிர் திட்டம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, நகராட்சி, பேரூராட்சி, வனத்துறை, தோட்டக்கலைத்துறை போன்ற பல்வேறு துறைகளின் சார்பில் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள், தமிழ்நாடு அரசின் முக்கியத்திட்டங்கள், சாதனைகள் குறித்த அரங்குகள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு அரசின் திட்டங்கள் குறித்துக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.



மேலும், பள்ளிக்கல்வித்துறை, கலைப்பண்பாட்டுத்துறை சார்பில், மாணவ-மாணவியர், உள்ளூர் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள், மகளிர் சுய உதவிக் குழுக்களைக் கொண்டு தெருவோர உணவகம் போன்ற அமைப்பில், சிறுதானியம் மற்றும் பல்சுவை உணவுடன் கூடிய உணவுத் திருவிழா, சிறப்பு வாய்ந்த கைவினை பொருட்கள் மற்றும் பிற பொருட்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மருத்துவ முகாம்கள் ஆகியவை நடத்தப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித்தலைவர் பொன்தோஸ், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் (பொ) ஷிபிலா மேரி, மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாசங்கர், முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சுகந்தி பரிமளம், மாவட்ட தொழில் மையம் மேலாளர் சண்முக சிவா, நகராட்சி ஆணையாளர்கள் காந்திராஜ் (உதகை), உதகை வட்டாட்சியர் ராஜசேகர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சையத் முகம்மத், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) சரண் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...