'நல்ல நிலைக்கு சமத்துவ மக்கள் கட்சி வராததற்கு நான்தான் காரணம்..!' - தலைவர் சரத்குமார் ஓபன் டாக்

கடந்த 16 வருடமாகச் சமத்துவ மக்கள் கட்சி நல்ல நிலைக்கு வரவில்லை அதற்கு நான்தான் காரணம் எனவும், தலைவன் சரியாக இருந்தால் தான், கட்சி சரியாக இருக்கும் எனவும், சமக தலைவர் சரத்குமார் வெளிப்படையாக ஒப்புக் கொண்டார்.



சென்னை: சென்னை தி.நகரில் உள்ள அலுவலகத்திலிருந்து படியே காணொலி காட்சி வாயிலாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து மாவட்டச் செயலாளர்களுடன் அக்கட்சியின் தலைவர் சரத்குமார் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த சரத்குமார்,



ஈரோடு கிழக்கு தொகுதி மட்டும் அல்ல. கட்சியின் எதிர்கால திட்டம் குறித்தும் இன்று நிர்வாகிகள் உடன் ஆலோசிக்க உள்ளதாகவும், இன்று மாலைக்குள் ஈரோடு கிழக்கு தொகுதி நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும்.

கொங்கு மண்டலத்தில் சமத்துவ மக்கள் கட்சிக்கு மக்கள் ஆதரவு உள்ளது. இந்த இடைத்தேர்தலில் மாவட்டச் செயலாளர்களும், நிர்வாகிகளும் விருப்பப்பட்டால் தேர்தலில் போட்டியிடத் தயார். அதுமட்டுமில்லாமல் பிரச்சாரம் செய்யத் தயாராக உள்ளேன், என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தனித்துத் தேர்தலில் நிற்க வேண்டும் என்பது தான் என் நிலைப்பாடு, ஆனால் ஒவ்வொரு தேர்தலின் போதும் நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் விருப்பத்தின் அடிப்படையில் கூட்டணியில் இணைந்தோம்.

அதனால், எதிர்வரும் காலங்களில் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதா? இல்லையா? என்பதை ஆராய்ந்து தான் முடிவு எடுக்க வேண்டும். இனி வரும் காலங்களில் மக்கள் நலனை முன் வைத்தே சமகவின் அரசியல் பயணம் இருக்கும்.

கடந்த 16 வருடமாகச் சமத்துவ மக்கள் கட்சி நல்ல நிலைக்கு வரவில்லை அதற்கு நான்தான் காரணம் எனவும், தலைவன் சரியாக இருந்தால் தான் கட்சி சரியாக இருக்கும் எனவும் வெளிப்படையாக ஒப்புக் கொண்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...