சர்ச்சைக்குரிய மருத்துவ கருத்து: சித்த மருத்துவர் ஷர்மிகா பிப்.10ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க உத்தரவு

சர்ச்சைக்குரிய வகையில் மருத்துவ கருத்துகளைத் தெரிவித்த விவகாரம் தொடர்பாகச் சித்த மருத்துவர் ஷர்மிகா இன்று இந்திய மருத்துவ கவுன்சில் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பு.


சென்னை: சர்ச்சைக்குரிய வகையில் மருத்துவ கருத்துகளைத் தெரிவித்த சித்த மருத்துவர் ஷர்மிகா வரும் பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.



சித்தா மருத்துவர் ஷர்மிகா இணையத்தில் தவறான மருத்துவ ஆலோசனைகளை வழங்குவதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. அந்தவகையில், குலோப்ஜாமூன் சாப்பிட்டால் 3 கிலோ எடை கூடும், குப்புறப் படுத்தால் மார்பக புற்றுநோய் வரும் உள்ளிட்ட சர்ச்சையான கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் சித்தா மருத்துவர் ஷர்மிகா வெளியிட்ட கருத்துகள் குறித்து விளக்கம் கேட்டு இந்திய மருத்துவ இயக்குநரகம் மற்றும் ஓமியோபதி வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை இந்திய மருத்துவ கவுன்சிலின் தமிழ்நாடு பிரிவு துணை இயக்குநர் பார்த்திபன் கடந்த 9ஆம் தேதி வெளியிட்டிருந்தார்.



இந்நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் மருத்துவ கருத்துகளை தெரிவித்த விவகாரம் தொடர்பாகச் சித்த மருத்துவர் ஷர்மிகா அரும்பாக்கம் சித்த மருத்துவக் கல்லூரியில் உள்ள இயக்குநராக அலுவலகத்தில் இன்று இந்திய மருத்துவ கவுன்சில் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.



சுமார் ஒருமணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது.



சித்த மருத்துவ முதல்வர் கனகவல்லி, மாநில மருந்து ஆய்வாளர் மேனக்ஷா, மருந்து ஆய்வாளர் உட்பட நான்கு பேர் கொண்ட குழு விசாரணை செய்தனர்.



விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய முறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநர் கணேஷ், இந்திய மருத்துவ கவுன்சில் மூலமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அந்த புகார்களை அவரிடம் தெரிவிக்கப்பட்டது.

மேலும் அதற்கான விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். வரும் பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிடப் பட்டு உள்ளது. அதன் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

நுங்கு சாப்பிட்டால் என்ன மாதுரியான பிரச்னைகள் வரும் உள்ளிட்ட பல கருத்துக்கள் இருந்தது இதெல்லாம் அவர்கள் இடத்தில் கொடுத்து உள்ளோம்.இன்றைய தினத்தைப் பொறுத்தவரை வாய்மொழி தகவலாகத் தான் பதில் அளித்துள்ளார். எழுத்துப்பூர்வமாகக் கொடுக்க உத்தரவிட்டுள்ளோம்.

எதுவாக இருந்தாலும் எழுத்துப்பூர்வமாகக் கொடுத்த பின்னர் தான் முடிவெடுக்க முடியும். நடவடிக்கை பொறுத்தவரைச் சித்தா கவுன்சில் விதிமுறைகல்படி எடுக்கப்படும். புகாரின் அடிப்படையில் அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. பத்தாம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமான விளக்கத்தை அளிப்பார், என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...