'வேலை, சம்பளம் என்பதை தாண்டி மனிதத்தையும், மனிதநேயத்தையும் படிக்க வேண்டும்..!' - கோவையில் எம்பி திருமாவளவன் அறிவுரை

படிக்காமல் கூட வேலை வாய்ப்பு மற்றும் சம்பாதிக்க முடியும். ஆனால் நாகரீகத்தை வளர்த்துக் கொள்ளக் கல்வி முக்கியம் என்று கோவையில் நடந்த தனியார் கல்லூரி விழாவில் விசிக எம்பி தொல் திருமாவளவன் பேச்சு.


கோவை: மதுக்கரை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டார்.

கோவை மதுக்கரை பகுதியில் உள்ள நைட்டிங்கேல் தனியார் கல்லூரியில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்,முன்னாள் மத்திய அமைச்சர் சஞ்சய் பஸ்வன், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேச மூர்த்தி, தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்று செவிலியர் மாணவ, மாணவிகளுக்கு வெள்ளை அங்கிகளை வழங்கினர்.



இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய தொல் திருமாவளவன், பெரியார் பிறந்து நூறு ஆண்டுகள் வாழ்ந்த இம்மண்ணில் இறுதி மூச்சு வரையில் பாடுபட்டும் கூட உளவியல் நிலவுகிறது எனச் சொன்னால், படித்து என்ன பயன்? பேராசிரியர்களாகவும் விஞ்ஞானிகளாகவும் இருந்து என்ன பயன்? மனித நேயத்தை உணராதவன் படித்து என்ன பொருள்? என்ற கேள்வி தான் எழுகிறது.

வேலை, சம்பளம் என எதிர்பார்ப்பது சரிதான், ஆனால் அதனைத் தாண்டி மனிதத்தையும் மனித நேயத்தையும் படிக்க வேண்டும். கல்வி பெற மனித உறவுகள் மேம்பட வேண்டும், சகோதரத்துவத்தை வளர்க்கப் பயன்பட்டால் தான் அது கல்வி, படிக்காமல் கூட வேலை வாய்ப்பை பெற முடியும், சம்பாதிக்க முடியும்.

நாகரீகத்தை வளர்த்து கொள்ள தான் கல்வி தேவை, மனித நேயத்தைப் பெருக்கி கொள்ள தான் கல்வி தேவை. மனித உறவுகளை மேம்படுத்தத் தான் கல்வி தேவை. ஒவ்வொரு படியிலும் ஒரு உலகத்தைப் பார்க்கிறோம். அடிப்படையில் உலகத்தைச் சரியாகப் புரிந்து கொள்ள மனித உறவு மேம்படுத்துகிற கல்வி முக்கியம், என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...