தாராபுரத்தில் அமமுக சார்பில் தெருமுனை பிரச்சாரம்

தாராபுரத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எம்ஜிஆர் வது பிறந்தநாள் விழா தெருமுனைப் பிரச்சாரம்.


திருப்பூர்: திருப்பூர் புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்றம் மற்றும் அமமுக சார்பில் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அமமுக மற்றும் புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்றத்தின் சார்பாக எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு பழைய நகராட்சி அலுவலகம் முன்பு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.



இந்த தெருமுனை பிரச்சாரத்தில் அமமுக பொதுச்செயலாளரும், புறநகர் மாவட்டச் செயலாளருமான சண்முகவேல் ஆலோசனையின்படி, மாநில வழக்கறிஞர் அணி துணை செயலாளர் ராஜேந்திரன் முன்னிலையில், எம்ஜிஆர் மன்ற செயலாளர் சுப்பிரமணியன் தலைமையிலும், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்லத்துரை, தாராபுரம் நகரச் செயலாளர் சிவராம் ஆகியோரது முன்னிலையிலும் நடைபெற்றது.

இதில் மாவட்ட அவைத் தலைவர் கோவிந்தசாமி, திருப்பூர் புறநகர் மாவட்ட பொருளாளர் வெங்கடாசலம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அமமுக செயலாளர் மூலனூர் வேலுமணி, தாராபுரம் அண்ணாதுரை, குண்டடம் லீலாவதி, குண்டடம் வடக்கு ராஜகோபால், வெள்ளகோவில் சண்முகராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கனிமொழி, மாவட்ட அம்மா தொழிற்சங்க செயலாளர் மூர்த்தி, உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...