உடுமலை உழவர் சந்தையில் விற்பனைக்கு வந்த வினோத கேரட்! - பொதுமக்கள் ஆச்சரியம்..!!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் செயல்பட்டுவரும் உழவர் சந்தைக்கு இன்று விற்பனைக்கு வந்த வினோதமான கேரட்டை பார்த்து பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை உழவர் சந்தைக்கு உடுமலை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகளை அதிகாலையில் தங்களது விளை நிலங்களில் விளைவித்த காய்கறிகளை கொண்டுவந்து விற்பனை செய்து வருகின்றனர்.



இந்த நிலையில், உடுமலை பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர், கேரட் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வந்த நிலையில் இரண்டு கேரட்கள் மட்டும் சற்று வித்தியாசமாக காணப்பட்டது.

அதாவது, இரண்டு கேரட்டு ஒன்றோடு ஒன்று பிணைந்து, இரு மனிதர்கள் ஒன்றிணைந்து இருப்பது போன்று காணப்பட்டது. இந்த வினோத கேரட்டை, உழவர் சந்தைக்கு வந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.

மேலும், அந்த கேரட்டை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் விவசாயிகள் பதிவிட்ட நிலையில், தற்போது அந்தப் புகைப்படம் வேகமாக வைரலாகி வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...