கோவையில் உயர் அழுத்த மின் கம்பி மீது மரம் உரசி விபத்து - மின்சாரம் பாய்ந்து ஆட்டோ ஓட்டுநர் பலி!

கோவை மதுக்கரை பாலத்துறை அருகே உயர் அழுத்த மின் கம்பி மீது மரம் உரசியதில் மின்சாரம் பாய்ந்து அருகே இருந்த மினி ஆட்டோ ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.


கோவை: கோவை மதுக்கரை அடுத்த பாலத்துறை பெருமாள் கோயில் வீதியை சேர்ந்தவர் ஹரிதாஸ் (வயது42). இவர் அப்பகுதியில் மினி ஆட்டோ ஓட்டி வந்தார். இந்நிலையில் வீட்டில் இருந்த ஹரிதாஸ், வீட்டின் வெளியே உயரமாக வளர்ந்து இருந்த முருங்கை மரத்தின் கிளைகளை வெட்டியதாக தெரிகிறது. அப்போது, வெட்டப்பட்ட கிளை முறிந்து அருகே இருந்த உயர் அழுத்த மின்கம்பி மீது விழுந்தது.



இதில், மரக்கிளை வழியே மின்சாரம் பாய்ந்ததில், ஹரிதாஸ் தூக்கி வீசப்பட்டு மயக்கமடைந்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக, மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, அப்பகுதியில் சுமார் 30 ஆண்டுகளாக குறுகிய உயரத்திலேயே உயர் அழுத்த மின் கம்பிகள் செல்வதால், ஆபத்து அதிகமாக இருப்பதாக கூறிய அப்பகுதி மக்கள், தற்போது மின்சாரம் பாய்ந்து ஓட்டுநர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

எனவே, அப்பகுதியில் செல்லும் உயர் அழுத்த மின்கம்பிகளை உயரமான கம்பங்கள் மூலமாக எடுத்துச் செல்ல வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த ஹரிதாஸ் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...