'நோட்டா உடன் போட்டியிடும் பாஜகவின் காலடியில் அதிமுக கிடக்கிறது..!' - தயாநிதிமாறன் எம்.பி. விமர்சனம்

தமிழகத்தில் பாஜகவினர் முதலில் ஜெயலலிதா காலில் விழுந்து கொண்டிருந்த நிலைமாறி, தற்போது நோட்டா உடன் போட்டியிடும் பாஜகவின் காலில் அதிமுகவினர் விழும் நிலைமை வந்துவிட்டதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் விமர்சனம் செய்துள்ளார்.


சென்னை: சென்னை பிராட்வே ஆசீர்வாதபுரத்தில் நவீன வசதியுடன் கட்டப்பட்ட புதிய உடற்பயிற்சி கூடம் மற்றும் விளையாட்டு மைதானத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் திறந்துவைத்தனர். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களையும் வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், இன்று சுமார் 1 கோடியே 89 லட்சத்தில் உருவாக்கப்பட்ட புதுப்பிக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தையும் உடற்பயிற்சி கூடத்தையும் திறந்து வைத்துள்ளோம் இது இந்த பகுதி இளைஞர்களின் நீண்ட நாள் கோரிக்கை தற்போது அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.

அதிமுகவினர் பாஜக அலுவலகத்தில் காத்துக்கிடக்கின்றனர் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், கொல்லைப்புற வாசல் வழியாக பாஜக தமிழகத்தை ஆட்டி படைக்கலாம் என்று இருக்கிறார்கள்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு இங்கே நடந்து இருக்கின்ற சதுரங்க ஆட்டத்தில் முழுக்க முழுக்க பாஜகவின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. பாஜகவினர் முதலில் ஜெயலலிதா காலில் விழுந்து கொண்டு இருந்தனர். தற்போது பாஜக காலில் அதிமுகவினர் விழும் நிலைமை வந்துவிட்டது.

தற்போதுகூட இந்த சதுரங்க ஆட்டத்தில் இரண்டாவது பெரிய கட்சி என்று சொல்லக்கூடிய அதிமுக நோட்டா உடன் போட்டியிடுகின்ற பாஜக அலுவலகத்தில் காத்துக் கிடக்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அதிமுகவின் நிலைமை எந்த அளவிற்கு கீழே சென்றுள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்., என்றார்.

திமுகவிலிருந்து ஒரு ஏக் நாத் சின்டே உருவாகுவர் என்ற கேள்விக்கு, அதிமுகவின் ஏக் நாத் சிண்டேவாக சி.வி.சண்முகம் இருக்கிறாரா என்பதை பார்க்க வேண்டும் என்றார். அப்போது, அருகிலிருந்த அமைச்சர் சேகர்பாபு, சி.வி.சண்முகம் அந்த விஷயத்தை பகலில் சொன்னாரா? இரவில் சொன்னாரா என்று காட்டமாக விமர்சனம் செய்தார்.

தொடர்ந்து சென்னை வ.உ.சி சாலையில் நவீன முறையில் புதியதாக கட்டப்பட்ட பொதுக்கழிப்பிடத்தை அமைச்சர் சேகர்பாபுவும், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஒப்படைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...