கோவையில் சசிகலாவிக்கு எதிராக பேட்டி கொடுத்தவரை விரட்டியடித்த அ.தி.மு.க.வினர்.


கோவையில் உள்ள à®….தி.மு.க. தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் காலை முதலே அக்கட்சி தொண்டர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அப்போது, அங்கு இருந்த à®….தி.மு.க. உறுப்பினர் அருண் என்பவர், சசிகலாவுக்கு எதிராக பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்தார். மேலும், காலம் தாழ்த்தி வழங்கப்பட்டாலும்  à®‡à®¤à¯ சரியான தீர்ப்பு என்று கூறினார். 



அருண் பேட்டி கொடுப்பதை கேட்ட à®….தி.மு.க தொண்டர்கள் அவரை இதய தெய்வம் மாளிகையை விட்டு விரட்டியடித்தனர். வெளியேற்றப்பட்ட அருண் மீண்டும் செய்தியாளர்களிடம் பேசினார். 



அப்போது அவர் கூறுகையில், 'அடிமட்டத்தொண்டன் தான் à®….தி.மு.க வின் பலம். தங்கள் கருத்துக்களை கூற எல்லோருக்கும் உரிமை உள்ளது. அதன்படி தான் எனது கருத்தை கூறினேன். ஆனால், என்னை விரட்டியடித்தனர். எங்கள் கட்சியில் புல்லுருவிகள் பலர் உள்ளனர். 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...