கோத்தகிரி அருகே மாடு மேய்க்கச் சென்ற விவசாயி - மறைந்திருந்து தாக்கிய சிறுத்தை!

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே மாடு மேய்க்கச் சென்றவரை, சிறுத்தை தாக்கியதில் படுகாயம். கோத்தகிரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.



நீலகிரி: கோத்தகிரி அருகே சிறுத்தை தாக்கியதில் படுகாயமடைந்தவருக்கு, அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் குடியிருப்பு பகுதிக்கு யானை, கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் வருவது அதிகரித்துள்ளது.



இந்த நிலையில் கோத்தகிரி அருகே கீழ் கோத்தகிரி பரவக்காடு பகுதியில் பன்னீர் செல்வம் (48) என்பவர் இன்று காலை அவரது மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றுள்ளார்.

அப்போது புதரில் மறைந்திருந்த சிறுத்தை ஒன்று பன்னீர் செல்வத்தை தாக்கியது. அவரின் அலரல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஒடி வந்து சிறுத்தையை விரட்டினர்.



படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



பன்னீர் செல்வத்திற்கு கோத்தகிரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...