தாராபுரத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி - ஓபிஎஸ் அணியினர் பங்கேற்பு!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஓபிஎஸ் அதிமுக அணியினர் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அண்ணா சிலை அருகே மொழிப் போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. அதிமுக ஓபிஎஸ் அணி புறநகர் மாவட்ட கழக செயலாளர் டி.டி.கே காமராஜ் பங்கேற்று மொழிப்போர் தியாகிகளின் உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.



அவரை தொடர்ந்து நகரக் கழக செயலாளர் கே.எஸ்.கே.கே.ஜவகர், மாவட்ட மாணவர் அணி செயலாளர் சுஜித் குமார் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் மூன்று நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், அதிமுக மாவட்ட செயலாளர் டிடிகே காமராஜ் பேசுகையில், இந்தி மொழி திணிப்பிற்கு எதிராக தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டத்தின்போது, தமிழ் மொழி காக்கப்பட வேண்டும் என்பதற்காக தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ஆம் நாள் மொழிப் போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

அந்த வகையில், திருப்பூர் புறநகர் மாவட்டம் தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் அன்னைத் தமிழுக்காக உயிர் துறந்த மாவீரர்களை நினைவுகூர்ந்து, அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம் என்றார்.

இந்த நிகழ்ச்சியில், தொகுதி கழக செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் தண்டபாணி, நகர துணை செயலாளர் பூபதி,மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் ஜாபர் சாதிக், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் சையத் இப்ராஹிம்,மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் பாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...