கோவை மருதமலை முருகன் கோயில் தைப்பூச விழா - மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆலோசனை

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூச தேர்த்திருவிழா மற்றும் கோனியம்மன் கோயில் திருத்தேர் விழாவை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்துச் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்.


கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தைப்பூச தேர்த்திருவிழா முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மருதமலை, சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூச தேர்த்திருவிழா மற்றும் கோனியம்மன் திருக்கோயில் திருத்தேர் பெருந்திருவிழா முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்துச் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் மாநகர காவல் துணை ஆணையர்கள் சந்தீப் (சட்டம் ஒழுங்கு) மதிவாணன் (போக்குவரத்து), மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன் பேசுகையில், மருதமலை, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தைப்பூச தேர்த்திருவிழா 28ஆம் தேதி முதல் பிப்ரவரி 7ஆம் தேதி வரையிலும் மற்றும் அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில் திருத்தேர் பெருந்திருவிழா மார்ச் 1ஆம் தேதியன்றும் நடைபெறவுள்ளது.

பண்டிகை தினங்களில் மேற்கொள்ளவேண்டிய முன்னேற்பாடு பணிகளைச் சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மூலம் மேற்கொள்ளப்படுவதுடன், தேவையான போக்குவரத்து நெறிமுறைகளைக் கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்குத் தெரியப்படுத்திட வேண்டும். போதிய அளவிலான காவலர்களைக் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்திட வேண்டும்.

திருவிழா நாட்களில் வழிபாட்டுத்தலங்களில் அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைத் தவறாது கடைப்பிடித்திட வேண்டும். மாநகராட்சியின் மூலம் திருவிழாவின் போது குடிநீர் விநியோகம் தடையின்றி நடைபெறத் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

திருக்கோவிலில் தேவையான இடங்களில் குடிநீர்த் தொட்டிகள் அமைத்தும், குப்பைகளை அகற்றி பிளிச்சிங் பவுடர், கிருமி நாசினி தெளித்து உடனுக்குடன் தூய்மைப் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

தீயணைப்பு வாகனத்தினை நிறுத்திவைப்பதுடன், தேவையான பணியாளர்களை பணியில் ஈடுபடுத்திட வேண்டும். திருவிழா நாட்களில் திருக்கோவில்களுக்கு மின்சாரம் தடையின்றி வழங்குவதுடன், தேர் செல்லும் பாதைகளில் மின் இணைப்புகளைச் சரிவரக் கண்காணித்திட வேண்டும்.

திருவிழா நாட்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் சூழல் நிலவுவதால், மருத்துவ உதவி வழங்கிட மருத்துவர் குழுவோடு இரண்டு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைத்திருப்பதுடன், முதலுதவி மேற்கொள்ளும் பொருட்டு, தனியாக மருத்துவக் குழு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

தேர் செல்லும் பாதைகளில் உள்ள மேடு. பள்ளங்கள் ஏதேனுமிருப்பின் சீர்படுத்தி சாலை செப்பனிடுதல் வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து செயல்பட்டு திருவிழா சிறப்பாக நடைபெறத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...