திருப்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் தீவிர சோதனை

குடியரசு தின விழாவை முன்னிட்டு திருப்பூர் ரயில் நிலையத்தில் மோப்பநாய்களைக் கொண்டு சோதனை. பயணிகளின் உடைமைகளைச் சோதனை செய்த பின்னரே அனுமதி.


திருப்பூர்: 74ஆவது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் திருப்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் பின்னலாடை நகரமாகத் திகழ்வதால் பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமான தொழிலாளர்கள் நாள்தோறும் திருப்பூருக்கு ரயில் மூலம் வருகின்றனர்.



எனவே குடியரசு தினத்தை ஒட்டி எந்தவித அசம்பாவிதமும் ஏற்பட்டு விடக்கூடாது, என்பதற்காக ரயில் நிலையத்தின் உள்ளே வரும் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் கருவிகள் கொண்டு சோதனை செய்து பின்னர் ரயில் நிலையம் உள்ளே அனுமதித்து வருகின்றனர்.



அதுமட்டுமின்றி ரயில் மூலம் திருப்பூர் வரும் பயணிகளையும் சோதனை செய்த பின்னரே வெளியே செல்ல அனுமதித்து வருகின்றனர். மேலும் ரயில் நிலையத்தில் மோப்பநாய்களைக் கொண்டு சோதனை நடத்தினர்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது மாணவர்களின் பல்வேறு இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் வாகன சோதனைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...