நீலகிரி கக்கநல்லா சோதனை சாவடியில் 500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்!

நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள கக்கநல்லா சோதனை சாவடியில் 500கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்து குடிமைப் பொருள் புலனாய்வுத் துறை போலீசார் நடவடிக்கை.


நீலகிரி: ரேசன் அரிசியை சிலர் குறைந்து விலைக்கு வாங்கி கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்குக் கடத்துவதாகப் புகார்கள் குவிந்து வந்த நிலையில் 500கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள நியாய விலை கடைகளில் இலவசமாக வழங்கப்படும் ரேசன் அரிசியைச் சிலர் குறைந்து விலைக்கு வாங்கி கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்குக் கொண்டு சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக மாவட்ட குடிமைப் பொருள் புலனாய்வு துறை போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வருகின்றது.

இதனையடுத்து போலீசார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து ஆய்வு செய்து வரும் நிலையில் இன்று கூடலூரிலிருந்து கர்நாடக மாநிலம் செல்லும் கக்கநல்லா பகுதியில் குடிமைப் பொருள் புலனாய்வு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.



அப்போது அந்த வழியாக வந்த பிக்கப் வாகனத்தைச் சோதனை செய்தபோது 500கிலோ ரேசன் அரிசி இருப்பது தெரிய வந்தது.



அதனைப் பறிமுதல் செய்த போலீசார் ஓட்டுநரை விசாரித்த போது கோத்தகிரியிலிருந்து கடத்தி வந்தது தெரிய வந்தது.

அதனையடுத்து ரேசன் கடத்தி வந்த கோத்தகிரி சேட் லைனை சார்ந்த ஓட்டுநர் நரேந்திரன்(40) கைது செய்த போலீசார் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...