'உங்களுக்கு 3 நாட்கள்தான் அவகாசம்..!' - சாலையோர கடை உரிமையாளர்களுக்கு கோவை போலீசார் எச்சரிக்கை!

கோவை நகரில் சாலையோரத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகளை 3 நாட்களுக்கு அகற்ற வேண்டும் என்று சாலையோர கடை உரிமையாளர்களுக்கு மாநகர போலீசார் கெடு விதித்துள்ளனர்.


கோவை: சாலையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை வரும் 3 நாட்களுக்குள் அகற்றும்படி சாலையோர கடை உரிமையாளர்களுக்கு கோவை மாநகர போலீசார் எச்சரித்துள்ளனர்.

கோவை மாநகரில் வாகன போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், பொதுமக்கள் சிரமமின்றி செல்லும் வகையில் சாலை ஆக்கிரமிப்பு மற்றும் நடைபாதை ஆக்கிரமிப்புகள் தொடர்பாக மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், மாநகரப் போக்குவரத்து துணை ஆணையாளர் மதிவாணன் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர்கள் குழுவினர் ஆலோசனை மேற்கொண்டனர்.

இதை அடுத்து மாநகரில் உள்ள முக்கிய சாலைகளை ஆய்வு செய்த போது, பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் உள்ள தேநீர் மற்றும் பிற கடைகள் உரிமையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் மட்டுமல்லாமல் நடைபாதை மற்றும் சாலைகளை ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கடை உரிமையாளர்களிடம் போலீசார் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சாலையோர ஆக்கிரமிப்புகள் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவு உள்ளதாலும், வரும் மூன்று நாட்களுக்குள் சாலை ஓரங்களில் உள்ள தேநீர் மற்றும் பிற கடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

அகற்ற தவறினால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

போக்குவரத்து நெரிசலை குறைக்க பொதுமக்கள் கடை உரிமையாளர்கள் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...