கோவையில் பிணையப் பத்திர உத்தரவை மீறிய இளைஞருக்கு 294 நாட்கள் சிறை

கோவை வடவள்ளியில் பிணையப் பத்திர உத்தரவை மீறிய இளைஞரை 294 நாட்கள் சிறையில் அடைக்க பேரூர் நிர்வாகத்துறை நடுவர் உத்தரவு.


கோவை: கோவையில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 'சுள்ளான்' என்ற வாலிபர் நன்னடத்தை பிணையப் பத்திரத்தை மீறியதால்,294 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

கோவை வடவள்ளி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த தீபக் என்ற சுள்ளான் (21) என்பவரை போலீசார் பலமுறை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி தீபக் பேரூர் நிர்வாகத்துறை நடுவர் முன்னிலையில் நன்னடத்தை பிணையப் பத்திரத்தில் கையெழுத்திட்டார். மேலும் இனி இம்மாதிரியான தவறுகளைச் செய்ய மாட்டேன் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மீண்டும் கடந்த டிசம்பர் மாதம் தீபக் நன்னடத்தை பிணையப் பத்திர உத்தரவுகளை மீறி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டார். அவரை வடவள்ளி போலீசார் கைது செய்த சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் பிணையப் பத்திரத்தை மீறிய குற்றத்திற்காக,செவ்வாய்க்கிழமை முதல் அடுத்த 294 நாட்கள் தீபக்கைச் சிறையில் வைக்கப் பேரூர் நிர்வாகத்துறை நடுவர் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல் கோவை மத்தியச் சிறையில் உள்ள தீபத்துக்கு வழங்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...