கோவையில் வீடு புகுந்து கொள்ளை - குற்றவாளி குண்டாசில் கைது

கோவையில் வீடு புகுந்து கொள்ளையடித்த வாலிபரை மாவட்ட எஸ்பி பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்ட நிலையில் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.


கோவை: காரமடை அருகே வீட்டில் கொள்ளையடித்தவரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம் காரமடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்டதாகத் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் (32), என்பவரை போலீசார் கைது செய்து கோவை மத்தியச் சிறையில் அடைத்துள்ளனர்.

பொது அமைதிக்கும், சட்ட ஒழுங்கிற்கும் பாதகமாகச் செயல்பட்டதாக அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டுமென மாவட்ட எஸ்பி பத்ரிநாராயணன் பரிந்துரை செய்தார். பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் சமீரன், சுரேஷை குண்டர் தரப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

இதை அடுத்து அவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதற்கான உத்தரவு நகல் சிறையில் உள்ள அவருக்கு வழங்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...