பல்லடம் அருகே பேருந்து-லாரி மோதல் - ஒட்டுநர் காயம்

பல்லடம் அருகே அரசு சொகுசு பேருந்து மீது கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி மோதிய விபத்தில் பேருந்தில் பயணித்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.



திருப்பூர்: பொங்கலூர் அருகே கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு லாரியும், சொகுசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் அருகே கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு ஏற்றிய லாரி ஒன்று கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது. அதேபோல் கோவையில் இருந்து கரூருக்கு அரசு சொகுசு பேருந்து 40 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.



பேருந்தினை ஓட்டுநர் கருணாகரன் ஓட்டி வந்தார்.பொங்கலூர் அருகே வந்த போது அரசு சொகுசு பேருந்து மீது எதிரே வந்த சரக்கு லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதியது. இதில் பேருந்தின் இடது புறம் முழுவதும் சேதமடைந்தது.

இதனால் பேருந்தின் இறங்கும் வழி கதவுகள் திறக்க முடியாமல் போனது.லாரி ஓட்டுநருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்தினை பார்த்த அவ்வழியாகச் சென்றவர்கள் அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.



தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேருந்தில் சிக்கியிருந்த பயணிகளை அவசரக் கால கதவு வழியாகக் கீழே இறக்கினர். மேலும் காயமடைந்த லாரி ஓட்டுநரை ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி விட்டு, தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலைச் சீர் செய்தனர்.

இந்த விபத்தில் பேருந்தில் வந்த பயணிகள் அனைவரும் எந்தவித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...