உடுமலையில் கொலை குற்றவாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

உடுமலையில் கொலை வழக்கில் சிறையில் உள்ள குற்றவாளியை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு.


திருப்பூர்: உடுமலை அடுத்த புக்குளம் பேருந்து நிறுத்ததில் தூங்கிக் கொண்டிருந்த பெண் மீது கல்லைப்போட்டு கொலை செய்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட புக்குளம் பகுதியில் தனலட்சுமி(40) என்பவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி பின்னர் கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார்.

சில நேரங்களில் புக்குளம் பேருந்து நிறுத்தத்தில் தங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்தாண்டு டிசம்பர் 2ஆம் தேதி தலையில் ரத்தக்காயத்துடன் புக்குளம் பேருந்து நிலையத்தில் அவர் இறந்து கிடப்பதாகத் தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் உடுமலை காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று, தடயங்களைச் சேகரித்து பின்பு தனலட்சுமி சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தனலட்சுமியின் சகோதரர் சுப்பிரமணியன்(58), கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கொலை வழக்காகப் பதிவு செய்து, விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் சம்பவ இடத்தின் அருகே செல்போன் சிக்னலை ஆய்வு செய்ததன் மூலம் சந்தேகத்தின் பேரில் உடுமலை பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் (33) என்பவரைப் பிடித்து விசாரித்ததில் புக்குளம் பேருந்து நிறுத்தத்தில் தூங்கிக் கொண்டிருந்த தனலட்சுமியை, கல்லை தலையில் போட்டுக் கொலை செய்தது தெரிய வந்தது.



இதனையடுத்து ஏரிப்பாளையத்தை சேர்ந்த ஆரோக்கியராஜை டிசம்பர் 04ஆம் தேதி கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் பரிந்துரையின் பேரில் இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ஆரோக்கியராஜை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கத் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.எஸ். வினீத்க்கு பரிந்துரை செய்தார்.

அதன்படி இன்று மாவட்ட ஆட்சியர் ஆரோக்கியராஜை தடுப்புக் காவலில் வைப்பதற்கான ஆணையைப் பிறப்பித்தார். அதன்படி கோவை மத்திய சிறையிலிருந்த ஆரோக்கியராஜிடம் உடுமலைப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ்கண்ணா தடுப்புக்காவல் ஆணையை வழங்கினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...