உடுமலை அருகே நாட்டு துப்பாக்கி பறிமுதல் - 4பேர் கைது

உடுமலை அருகேயுள்ள சாம ராயபட்டி பெருமாள்புதூர் பிரிவு அருகே நாட்டு துப்பாக்கியுடன் பைக்கில் வந்த 3பேரை போலீசார் பிடித்து அவர்களிடமிருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல்.


திருப்பூர்: சாம ராயபட்டி பெருமாள்புதூர் பிரிவு அருகே போலீசார் வாகன சோதனையின் போது நாட்டுத்துப்பாக்கியுடன் பைக்கில் வந்த 3பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள சாமராயபட்டி பெருமாள்புதூர் பிரிவு அருகே 3 பேர் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த குமரலிங்கம் போலீசார் அவர்களை நிறுத்தி விசாரணை ‌நடத்தினர்.

அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதைத்தொடர்ந்து பைக்கை சோதனை செய்ததில், நாட்டு துப்பாக்கி, 3 தோட்டாக்கள், இரண்டு டார்ச் லைட்டுகள் வைத்திருந்தது தெரிய வந்தது.

மேலும் விசாரணையில் துப்பாக்கி மற்றும் தோட்டக்களை கோவை சதீஷ் என்பவரிடம் காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக ரூ.14ஆயிரம் கொடுத்து வாங்கியது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து சாமராய பட்டியைச் சேர்ந்த துரைவேல் (39), சிவசக்தி (20), மாசாணி முத்து (23), கோவை சதீஷ் என்கிற கோபால கிருஷ்ணன் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...