கோவையில் 7 மாத குழந்தையின் சுவாச குழாயில் சிக்கிய பிளாஸ்டிக் துண்டு அகற்றம்!

கோவையில் 7 மாத குழந்தையின் சுவாச குழாயில் சிக்கிய பிளாஸ்டிக் துண்டை, அறுவை சிகிச்சை இல்லாமல் கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அகற்றினர்.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் 7 மாத குழந்தையின் சுவாச குழாயில் சிக்கிய பிளாஸ்டிக் துண்டை, மருத்துவர்கள் அகற்றினர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நெகமம் பகுதியை சேர்ந்த ஏழு மாத ஆண் குழந்தை ஒன்று திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் குழந்தையின் பெற்றோர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கிருந்து மருத்துவர்கள் குழந்தையை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு குழந்தை அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து காது, மூக்கு, தொண்டை சிறப்பு பிரிவு மருத்துவர்கள் குழந்தையை பரிசோதனை செய்தனர். மேலும் குழாய் மூலமாக கருவியை செலுத்தி சுவாச குழாயில் சோதனை செய்தபோது குழந்தையின் சுவாசக் குழாயில் பிளாஸ்டிக் துண்டு சிக்கி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து உடனடியாக தலைமை மருத்துவர்கள் ஆலோசனை மேற்கொண்டு குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யாமல் பிளாஸ்டிக் துண்டை பத்திரமாக அகற்றினர். மேலும் பிளாஸ்டிக் துண்டு அகற்றப்படாமல் இருந்திருந்தால் நேரடியாக அது குழந்தையின் நுரையீரலுக்கு சென்று தீவிர பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

குழந்தைக்கு உடனடியான சிகிச்சை மேற்கொண்டு பிளாஸ்டிக் துண்டுகளை அகற்றிய மருத்துவர்களை கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா பாராட்டினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...