181 சதவீதம் கூடுதல் கொடி நாள் வசூல் - கோவை மாநகராட்சி நிர்வாகத்திற்கு விருது!

கொடி நாள் வசூலில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 181 சதவீதம் கூடுதலாக வசூலித்த கோவை மாநகராட்சிக்கு, இன்று தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் விருது அளிக்கப்பட உள்ளது.


கோவை: கொடி நாள் வசூலில் நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதலாக வசூலித்த கோவை மாநகராட்சிக்கு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று விருது அளிக்க உள்ளார்.

முப்படை வீரர்களின் நலனை காக்க ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7ஆம் தேதி கொடி நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அப்போது பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் படை வீரர்கள் நலனுக்காக நிதி வசூல் செய்யப்படுகிறது.

மேலும் இவ்வாறு கொடிநாள் வசூல் செய்யும் சிறந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஆளுநர் மாளிகையில் குடியரசு தினத்தன்று விருதுகளும் வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு கொடி நாள் வசூலில் மாவட்ட ரீதியாக சென்னை அதிக வசூல் செய்து விருது பெறுகிறது.



நிர்ணயித்த இலக்கை விட கூடுதலாக வசூல் செய்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு விருது அறிவிக்கப்பட்டது.

அதேபோல் மாநகராட்சியில் சென்னை பெருநகர மாநகராட்சி அதிக பணம் வசூல் செய்து முதலிடத்தையும், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக வசூல் செய்து கோவை மாநகராட்சி நிர்வாகம் கூடுதல் இலக்கில் முதலிடத்தையும் பிடித்துள்ளது.

அதன்படி கோவை மாநகராட்சிக்கு 15 லட்சத்து 40 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் நிர்ணயித்த கொடினால் நிதியை விட நிதியாக 43,22,820 வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியானது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 181% அதிகம். எனவே சிறப்பான முறையில் நிதி வசூல் செய்ததற்காக கோவை மாநகராட்சி நிர்வாகத்திற்கு விருது வழங்கப்படுகிறது.

இதனை சென்னை ஆளுநர் மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என் ரவியிடம் இருந்து கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் பெற உள்ளார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...