கிணத்துக்கடவு அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா கொண்டாட்டம்!

கோவையை அடுத்த கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் 74 வது குடியரசு தினம் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது.


கோவை: கிணத்துக்கடவு, 74 வது குடியரசு தினம், கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் கொண்டாடப்பட்டது.

நாட்டின் 74வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது,

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி ஏற்றி குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.



கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் ஆய்வாளர் செந்தில்குமார் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்தார்.



இதை போல் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் மல்லிகா தேசியக்கொடி ஏற்றினார். இதில் வருவாய் துறை பலர் கலந்து கொண்டனர்.

இதே போல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் நாகராணி தேசிய கொடியை ஏற்றினார். இதில் ஒன்றிய துணைத் தலைவர் துரைசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், சிக்கந்தர் பாட்ஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...