உடுமலையில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் - முன்னாள் அமைச்சர் பங்கேற்பு

உடுமலையில் நடந்த மொழிப்போர் தியாகிகளின் நினைவாக வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பங்கேற்று பேசினார்.



உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலை வெங்கட கிருஷ்ணா ரோட்டில் மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளரான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.



கூட்டத்தில் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசுகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏழை எளிய மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தி உள்ளார்.

உடுமலை நகராட்சி பொன்விழா ஆண்டை முன்னிட்டு 50 கோடி நிதி ஒதுக்கினார். கால்நடை பல்கலைக்கழகம், மருத்துவக் கல்லூரி அமைக்க 235 கோடி நிதி ஒதுக்கியது உட்பட பல்வேறு நலத்திட்டங்கள் உடுமலைக்கு அதிமுக அரசு செய்துள்ளது.

ஆனால், தற்போது ஆட்சியில் இருக்கும் திமுக அரசு பணிகளை மெத்தனமாக செய்து வருகிறது, என்றார்.



நிகழ்வில் உடுமலை நகர செயலாளர் ஹக்கீம், மாவட்ட சார்பு அணி மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...