உடுமலை துர்க்கை அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா - பக்தர்கள் திரளாக பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே சின்னவீரன்பட்டியில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்பு.



திருப்பூர்: உடுமலை சின்ன வீரன் பட்டியில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள சின்ன வீரன் பட்டி ஊராட்சியில் பழமையான ஸ்ரீ பெரிய விநாயகர், ஸ்ரீ தன்னாட்சியப்பன் ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா இன்று நடைபெற்றது.



பேரூர் சாந்தலிங்கம் மருதாசல அடிகளார் தலைமையில் நடைபெற்றது. புண்ணிய தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்கள் ஊர்வலமாக கொண்டு வந்து வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு தண்ணீர் ஊற்றபட்டது.



பின்னர் கோபுரங்களுக்கு தீபாதரணை காட்டிய பின் பொதுமக்களுக்கு புனித நீர், பூ விசபட்டன. பின்னர் யாக சாலை குண்டம் அமைந்து உள்ள இடத்தை பலர் கலந்து கொண்டு தரிசனம் மேற்கொண்டனர்.



கும்பாஷக விழாவில் ஆயிரக்கணக்கான பக்கதர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக நேற்று யாகசாலை பூஜை வழிபாடு, முளைப்பாரி எடுத்து வழிபாட்டில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...