உதகையில் குடியரசு தினம் கொண்டாட்டம் - ரூ.2.40 கோடி நலத்திட்டங்கள் உதவி வழங்கிய ஆட்சியர்

உதகையில் நடந்த குடியரசு தின விழாவில் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் அம்ரித், 59 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 40 லட்சத்து 32 ஆயிரத்து 399 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.


நீலகிரி: உதகை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.



நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அம்ரித் தேசிய கொடியேற்றினார். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கி.பிரபாகர் உடனிருந்தார்.



தொடர்ந்து காவல்துறையின் அணி வகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சியர் ஏற்றுக் கொண்டார். இந்த அணி வகுப்பில் காவல்துறை, ஊர்காவல் படை, தீயணைப்புத்துறை ஆகியோர் பங்கேற்றனர்.



பல்வேறு துறைகள் மூலம் 123 அதிகாரிகளுக்கு நற்சான்றுகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.



மேலும், பல்வேறு துறைகள் மூலம் 59 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 40 லட்சத்து 32 ஆயிரத்து 399 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அம்ரித் வழங்கினார்.



தொடர்ந்து விழாவில் தோடர் பழங்குடியின இன மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அவற்றை ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

இவ்விழாவில், மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் மோனிகா ராணா, மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...