உடுமலை அருகே மொழிப்போர் வீரர்கள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குரல்குட்டையில் மொழிப்போர் வீரர்கள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் அதிமுகவினர் பலர் பங்கேற்பு.


திருப்பூர்: திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மொழிப்போர் வீரர்கள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம், உடுமலை அருகே குரல்குட்டையில் நடைபெற்றது.



திருப்பூர் புற நகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மடத்துக்குளம் தொகுதி உடுமலை ஒன்றியம் குரல்குட்டையில் மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மகேந்திரன் எம் எல் ஏ தலைமை தாங்கினார். உடுமலை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஆர் ஜி ஜெகநாதன் முன்னிலை வகித்தார்.

கழக செய்தி தொடர்பாளர் செல்வி அப்சரா ரெட்டி சிறப்புரையாற்றினார், மாணவரணி மாவட்ட செயலாளர், வாளவாடி ஊராட்சி மன்ற தலைவர் தேவராஜ் வரவேற்றார். கலைப்பிரிவு மாவட்ட செயலாளர் குரல்குட்டை கூட்டுறவு சங்கத் தலைவர் பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்தார்.



கூட்டத்தில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி கழகச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொன்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...