கோவையில் பணம் தரமறுத்த ஜேசிபி ஆப்ரேட்டரை தாக்கி பணம் பறிப்பு - 3 பேர் கைது

கோவை செல்வபுரத்தில் டாஸ்மாக் மதுக்கடையில் குடிப்பதற்கு பணம் தர மறுத்த ஜேசிபி ஆப்ரேட்டரை கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடம் இருந்து பணத்தை பறித்துச் சென்ற மூன்று பேர் கைது.



கோவை: பேரூர் சாலையில் உள்ள டாஸ்மார்க் அருகே குடிக்கப் பணம் தாராத ஜேசிபி ஆப்ரேட்டரை தாக்கியவர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை செல்வபுரம் எல்.ஐ.சி காலனி பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் (42). ஜேசிபி ஆப்ரேட்டரான இவர் நேற்று பேரூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றுள்ளார்.

அப்போது அவருக்குத் தெரிந்த அதே பகுதியைச் சேர்ந்த ஜான்சா என்பவர், தனது இரண்டு நண்பர்களுடன் வந்துள்ளார். மேலும் ஜான்சா மதுகுடிக்க அருண்குமாரிடம் பணம் கேட்டதாகத் தெரிகிறது.

ஆனால் அருண்குமார் பணம் கொடுக்க மறுத்ததால் அவருடன் வந்த இஸ்மாயில் (28) மற்றும் முஸாமில் (32) இருவரும் தகாத வார்த்தைகளால் பேசி கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

இதையடுத்து ஜான்சா தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அருண்குமாரை மிரட்டி அவரிடம் இருந்த பணத்தைப் பறித்துக் கொண்டு சென்றனர்.

இந்நிலையில் அருண்குமார் அளித்த புகாரின்பேரில் செல்வபுரம் போலீசார், ஜான்சா (37), இஸ்மாயில் (28), முசாமில் (32) ஆகிய மூவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...