தாராபுரம் அருகே மண்ணெண்ணெய் விளக்குடன் கிராம மக்கள் முற்றுகை - கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு

குடியரசு தினத்தை ஒட்டி தாராபுரம் அருகே கவுண்டச்சிபுதூரில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் மண்ணெண்ணெய் விளக்குடன் கிராம மக்கள் முற்றுகை. தெரு விளக்கை முறையாகப் பராமரிப்பதில்லை என்று குற்றச்சாட்டு.



திருப்பூர்: தாராபுரம் அருகேயுள்ள கவுண்டச்சிபுதூர் கிராம ஊராட்சியில் குடியரசு தினத்தை ஒட்டி கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம், கவுண்டச்சிபுதூர் கிராம ஊராட்சியின் கிராம சபைக்கூட்டம் குடியரசு தினவிழாவையொட்டி கொட்டாபுளிபாளையம் ரோடு, சிந்துநகர், சிறுவர் விளையாட்டு பூங்கா மைதானத்தில் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் செல்வி தலைமை தாங்கினார்.

இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல். கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை உள்ளிட்ட13, தீர்மானங்களை முன் வைத்தனர். இந்த தீர்மானத்தை ஊராட்சி மன்ற தலைவர் வாசிக்கத் தொடங்கினார்.



அப்போது கொண்டரசம்பாளையத்தைச் சேர்ந்த கிராம மக்கள் கையில் மண்ணெண்ணெய் விளக்கேந்தி கூட்டத்திற்கு வந்து விளக்கைத் தெரு கம்பங்களில் கட்டி விடுங்கள், நாங்கள் இருட்டில் வாழ்ந்து கொள்கிறோம். மண்ணெண்ணெய் விளக்கின் மூலமாக எங்கள் தெரு பகுதியில் வெளிச்சம் கிடைக்கட்டும் எனத் தெரிவித்தனர்.



அதன் பிறகு தெரு விளக்கை முறையாகப் பராமரிப்பதில்லை எனத் தெரிவித்தனர். இதனால் தலைவர் செல்விக்கும், கிராம மக்களுக்கும் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பிறகு மண்ணெண்ணெய் விளக்கை ஊராட்சி மன்ற தலைவர் செல்வியிடம் பொதுமக்கள் கொடுத்தனர். அதனைப் பெற்றுக் கொள்ள மறுத்த தலைவர் பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.



அப்போது விளக்கு ஏந்தி வந்த கிராம மக்களைப் பார்த்து மண்ணெண்ணெய் விளக்கு வாங்குவது எனது பொறுப்பல்ல, மாவட்ட ஆட்சியரிடம் கொண்டு சென்று விளக்கைக் கொடுங்கள் எனக் கூறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தனர்.



மேலும் முகமதியா நகர் வினோபா நகர் பாலசுப்பிரமணியம் நகர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நகர் பகுதியில் சாக்கடை, குடிநீர், குப்பை எடுப்பது, உள்ளிட்ட அடிப்படை தேவைகள் எதுவும் கவுண்டச்சி புதூர் ஊராட்சி நிர்வாகத்தால் செய்யப்படுவதில்லை எனக் குற்றஞ்சாட்டினர்.

இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரமேஷ், ஊராட்சி, நகராட்சி பகுதியுடன் சேர்ந்து இருப்பதால் நடவடிக்கை எடுப்பதில் சிரமமாக உள்ளது எனத் தெரிவித்தார். கிராம சபைக் கூட்டம் முடிவு பெறாமலே கிராம மக்கள் கூச்சல் குழப்பங்களோடு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...