பல்லடத்தில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் டிராக்டர் பேரணி

பல்லடத்தில் மத்திய அரசின் விவசாயிகள் விரோத கொள்கைகளை கண்டித்து டிராக்டர் பேரணி. நாடு முழுவதும் விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்ப பெற கோரி விவசாயிகள் வலியுறுத்தல்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தினர்.



ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பல்லடத்தில் ராயர்பாளையத்தில் இந்த டிராக்டர் பேரணி தொடங்கியது.



அங்கிருந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி 10-க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் விவசாயிகள் பேரணியாக சென்றனர்.



அப்போது, குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்ட உத்தரவாதம் கொடுக்க வேண்டும், எம் எஸ் சாமிநாதன் குழு பரிந்துரையின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்து விவசாய பொருட்களை அரசு கொள்முதல் செய்ய வேண்டும், சிறு குறு நடுத்தர விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த டிராக்டர் பேரணி நடைபெற்றது.



டிராக்டர் பேரணியில், பல்லடம், உடுமலைப்பேட்டை, தாராபுரம் ஆகிய ஊர்களில் இருந்து 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...