பள்ளேபாளையம் கிராம சபை கூட்டத்தில் அதிகாரியிடம் பொதுமக்கள் சரமாரியாக கேள்வி

மேட்டுப்பாளையம் அருகே பள்ளேபாளையம் ஊராட்சிக்கு முறையாகக் குடிநீர் விநியோகம் செய்யாத அதிகாரியை கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் சூழ்ந்து சராமாரியாக கேள்வி எழுப்பியதால் பரபரப்பு.



கோவை: குடியரசு தினத்தை ஒட்டி மேட்டுப்பாளையம் அருகே பள்ளேபாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பள்ளேபாளையம் ஊராட்சியில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சி மக்களுக்கு மூளையூர் என்ற இடத்தில் உள்ள பவானி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து சம்பரவள்ளி கோவில் மேடு நீரேற்று நிலையத்திலிருந்து தண்ணீர் சுத்திகரிப்பு செய்து பொதுமக்களுக்கு ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த ஊராட்சிக்கு வழங்க வேண்டிய தண்ணீரை, குடிநீர் வழங்கல் அதிகாரிகள் முறையாக விநியோகம் செய்யவில்லை என கூறப்படுகிறது.

அத்துடன் சம்பரவள்ளி கோவில் மேடு பகுதியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து தண்ணீரைத் திருட்டுத்தனமாகத் தோட்டங்களுக்கு வழங்குவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.



இந்நிலையில் இன்று பள்ளேபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவர் சிவக்குமார் தலைமையில், நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திற்கு வந்த குடிநீர் வழங்கல் அதிகாரி கலந்துக் கொண்டார்.



அவரிடம் பொதுமக்கள் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியதால் அதிகாரிக்கு என்ன செய்வது எனத் தெரியாமல் மௌனமாக இருந்தார்.

எங்கள் ஊராட்சிக்கு வழங்க வேண்டிய தண்ணீர் எங்கே? அதனை யாருக்கு கொடுக்கிறீர்கள் என அதிகாரியைச் சூழ்ந்த பொதுமக்கள் குடிநீர் முறையாக வராமல் இருப்பதற்கான காரணத்தைக் கூற வேண்டும் என வலியுறுத்தினர்.



வசமாக மாட்டிய அதிகாரி ஒரு கட்டத்தில் எங்களுக்கு மின்சாரம் ஒழுங்காக வழங்கப்படுவதில்லை. உயர் மின் அழுத்தம் வருவதால் தான் அடிக்கடி நீரை உரிஞ்சும் மோட்டார் பழுதாகி நின்று விடுகிறது.

ஆகவே இந்த பிரச்சினையை மின்சாரத்துறையால் தான் என மழுப்பலாகப் பேசியதுடன், மின்வாரிய உயர் அதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல் அளித்து அவர்கள் பிரச்னையைச் சரி செய்து தருவதாகக் கூறியுள்ளனர். எனவே அதற்குப் பின் குடிநீர் பிரச்சினை சீராகும் எனக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

கடந்த வாரம் சம்பரவள்ளி கோவில் மேடு நீரேற்று நிலையத்தில் உள்ள குடிநீர் வழங்கல் அதிகாரிகள் தண்ணீரை திருடி வந்த நிலையில் அதனை ஊராட்சி மன்ற தலைவர்கள் சிலர் கண்டுபிடித்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஆதாரத்துடன் கூறியதால், இரண்டு அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.

அதற்குப் பின் தான் அடிக்கடி இந்த உயர்மின் பிரச்னையைக் கூறி தண்ணீர் விநியோகம் சரிவர வருவதில்லை எனக் கூறும் அப்பகுதி மக்கள், குற்றத்தைக் கண்டுபிடித்துக் கொடுத்ததால் அந்த ஊராட்சி மக்களைப் பழிவாங்க அதிகாரிகள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம்சாட்டினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...