துடியலூர் அருகே தனியார் பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

துடியலூர் அருகே வி.எஸ்.கே. நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற 74வது குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக துடியலூர் காவல் பயிற்சி உதவி ஆய்வாளர் புவனேஸ்வரி பங்கேற்பு.


கோவை: வி.எஸ்.கே. நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 74வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.



சுதந்திர இந்தியாவின் 74வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூர் அருகே வி.எஸ்.கே. நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் குடியரசு தினவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர் தேசியக் கொடியினை ஏற்றிவைத்தார். பள்ளி மாணவ மாணவிகள் சுபாஸ் சந்திரபோஸ், வேலுநாச்சியார், பாரதியார், ஜவர்கலால் நேரு, திருப்பூர் குமரன் உள்ளிட்ட தேசத் தலைவர்கள் போன்றும் கல்பனா சாவ்லா, ரோபோட் போன்றும் வேடம் அணிந்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.



இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக துடியலூர் காவல் பயிற்சி உதவி ஆய்வாளர் புவனேஸ்வரி கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கி மாணவ மாணவிகளிடம் உரையாற்றினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...