இடிகரை அரசு உயர்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

கோவை இடிகரை அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதை தொடர்ந்து மாணவர்கள் போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்.


கோவை: இடிகரை அரசு உயர்நிலைப் பள்ளியில் 74வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.



கோவை இடிகரை அரசு உயர்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் சித்ரா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் தியாகராஜன் முன்னிலை வகித்தார்.

இந்த விழாவில் தேசிய கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.



தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளி மைதானத்தில் வரையப்பட்ட இந்தியா வரைபடத்தில் நின்று தேச பக்தி பாடல்களைப் பாடினர்.



இந்த வரைபடத்தில் நடுவே பாரத மாதா வேடமிட்டு தேசிய கொடியுடன் பள்ளி மாணவி நின்றார்.



மேலும் ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பற்றி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...