பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர் பாலச்சந்தருக்கு "தமிழ்நாடு இளம் அறிவியலாளர் விருது"


தமிழ்நாடு உயர்கல்வித்துறையின் தமிழக அரசின் சென்னை அறிவியல் -விழா 2017 கடந்த 09/02/2017 முதல் 12/02/2017 வரை இராணிமேரி கல்லூரி காமராஜர் சாலையில் நடைபெற்றது. இதில் அறிவியல் நகரம் உயர்கல்வித் துறையின் துறைத் தலைவராக சகாயம் மற்றும் உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திக், அண்ணா பல்கலைக்கழகம் பதிவாளர் கணேசன்,  அறிவுஒளி (அண்ணாபல்கலைக்கழகம்), தேவசேனாதிபதி (அறிவியல்நகரம்) ரீட்டா மற்றும் ஹேமா முன்னிலையில்  “தமிழ்நாடு வாழ்நாள் அறிவியல் சாதனையாளர் விருது” பேராசிரியர் மற்றும் வேதியல்துறை ஆராய்ச்சி இயக்குனர் இராஜேந்திரன் க்கும் மற்றும் "தமிழ்நாடு இளம் அறிவியலாளர் விருது" மனித மரபியல் மற்றும் மூலக்கூறு உயிரியல்துறை பாரதியார் பல்கலைக்கழகம் பேராசிரியர் பாலச்சந்தர்க்கு வழங்கப்பட்டது.

 

பாலச்சந்தர் கடந்த 2008 ஆம் ஆண்டு முனைவர் பட்டயப் படிப்பை பாரதியார் பல்கலைகழகத்தில் முடித்து தங்கப்பதக்கத்துடன் கூடிய முனைவர் பட்டதைப் பெற்றார். இவர் 2011ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழுவின் மேற்படிப்பை பயின்றார். 2013 ஆம் ஆண்டு இந்திய அரசின் இளம் விஞ்ஞானி ஆராய்ச்சி திட்டம் (FAST TRACK – Project) மூலம் ருபாய் இருபத்தைந்து லட்சத்து  ஐம்பதாயிரம் (25,50,000) பெற்றுள்ளார். மேலும் இவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். மரபியல் ஆராய்ச்சியை மலைவாழ் மக்களிடம் மேற்கொண்டு வருகிறார். 

நரம்பியல் மரபணு குறைபாடு தொடர்பான ஆராய்ச்சியை துவங்குவதற்காக அமெரிக்காவின் Calofornia பல்கலைக்கழகத்துடன் இணைந்து (MOU) ஒப்பந்தம் -மனிதகுருத்தணு தொடர்பாக பெற்றுள்ளார். இவ்வாறாக பல்வேறு சாதனைகளை புரிந்த பாலச்சந்தர் அவர்களுக்கு தமிழக அரசின் உயர்கல்வித்த்துறை சார்பாக அறிவியல் நகரம் வழங்கும் தமிழ்நாடு இளம் அறிவியலாளர் விருது கௌரவப்படுத்தி வழங்கப்பட்டதை துணைவேந்தர் கணபதி அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார். 

மேலும் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மனித மரபியல் மற்றும் மூலக்கூறு உயிரியல்துறை தலைவர் விஜய் ஆனந்த், முன்னாள் துறைத் தலைவர் சசிகலா, விலங்கியல் துறை மற்றும் பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Newsletter

சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்கா; மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ..!

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் பிரச்சா...

கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது; முதல்வர் கொடுத்த பொறுப்பை செந்தில் பாலாஜி சிறப்பாக நிறைவேற்றுவார்: கோவையில் கமல்ஹாசன் பரப்புரை..!

கோவை ராஜவீதியில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவி...

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...