கொடி நாள் நிதி வசூல் - கோவை மாநகராட்சிக்கு விருது

கொடி நாள் வசூலில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 181 சதவீதம் கூடுதலாக வசூலித்த கோவை மாநகராட்சிக்கு, ஆளுநர் மாளிகையில் விருது வழங்கப்பட்டது.


கோவை: கொடி நாள் வசூலில் நிர்ணயிக்கப்பட்டதை விடக் கூடுதலாக வசூலித்த கோவை மாநகராட்சிக்கு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி விருது வழங்கினார்.

முப்படை வீரர்களின் நலனைக் காக்க ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7ஆம் தேதி கொடி நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அப்போது பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் படை வீரர்கள் நலனுக்காக நிதி வசூல் செய்யப்படுகிறது.

மேலும் இவ்வாறு கொடிநாள் வசூல் செய்யும் சிறந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஆளுநர் மாளிகையில் குடியரசு தினத்தன்று விருதுகளும் வழங்கப்படும். அந்த வகையில், கோவை மாநகராட்சிக்கு 15 லட்சத்து 40 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் நிர்ணயித்த கொடிநாள் நிதியை விட ரூ.43லட்சத்து22 ஆயிரத்து 820 வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியானது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 181% அதிகம். எனவே சிறப்பான முறையில் நிதி வசூல் செய்ததற்காகக் கோவை மாநகராட்சி நிர்வாகத்திற்கு விருது வழங்கப்பட்டது. இதனைச் சென்னை ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என் ரவியிடம் இருந்து கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் பெற்றுக்கொண்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...