இடிகரை பேரூராட்சி அலுவலகத்தில் குடியரசு தின கொண்டாட்டம்

கோவை இடிகரை பேரூராட்சியில் பெரியநாயக்கன்பாளையம் துணைக் காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் தலைமையில் போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு.


கோவை: இடிகரை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பெரியநாயக்கன்பாளையம் துணைக் காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் தலைமையில் போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்றனர்.

கோவை இடிகரை பேரூராட்சி அலுவலகத்தில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.



இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது தமிழக முதல்வரின் வேண்டுகோளுக்கு இணங்க, தமிழகத்தில் போதைப் பொருட்கள் இல்லா பேரூராட்சியாக இடிகரை பேரூராட்சியை மாற்றிக் காட்ட வேண்டும்.

இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.



தொடர்ந்து அனைவரும் கைகளை உயர்த்தி போதைப் பொருள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.



இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் ஜெகநாதன், செயல் அலுவலர், பேரூராட்சி உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...