கோவையில் சிறுமி பலாத்காரம் - வளர்ப்பு தந்தை போக்சோவில் கைது

கோவையில் 13 வயது வளர்ப்பு மகளை பலாத்காரம் செய்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது.


கோவை: கோவையில் வளர்ப்பு மகளை மிரட்டி பாலத்காரம் செய்த தந்தையைப் புகாரின் பேரில் போலீசார் போக்சா சட்டத்தில் கைது செய்தனர்.

கோவையைச் சேர்ந்தவர் 13 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். மாணவியின் தந்தை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

இதனையடுத்து சிறுமியின் தாய் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 35 வயது நபரை இரண்டாவது திருமணம் செய்தார். மாணவியின் தாய் கூலி வேலை செய்து வருகிறார். அவர் வேலைக்குச் செல்லும் நேரத்தில் மாணவியின் வளர்ப்பு தந்தை மாணவியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனை வெளியே கூறினால், கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் மாணவி தனது தாயிடம் சொல்லாமல் இருந்தார். இதனை தனக்குச் சாதமாகப் பயன்படுத்திக் கொண்ட அவர் தொடர்ந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதன் காரணமாக மாணவி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து மாணவியை அவரது தாய் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் 2மாத கர்ப்பமாக இருப்பதாக, அவரது தாயிடம் தெரிவித்தனர். இதனை கேட்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் அவர் தனது மகளிடம் கர்ப்பத்துக்கு யார் காரணம் என விசாரித்தார். அப்போது மாணவி வளர்ப்பு தந்தை தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தாகவும், அவர் தான் கர்ப்பத்துக்குக் காரணம் என தெரிவித்தார். இது குறித்து அவர் பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் 13 வயது மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வளர்ப்பு தந்தை கைது செய்தனர். பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...