மேட்டுப்பாளையத்தில் குப்பை அள்ளும் வாகனத்தில் வந்த அரசுக் கோப்புகள் - வைரல் வீடியோ

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே குடியரசு தினத்தன்று சிக்கதாசம்பாளையம் கிராம சபை கூட்டத்திற்காக, ஊராட்சி அலுவலகத்தில் இருந்த அரசுக் கோப்புகளை குப்பை அள்ளும் வாகனத்தில் கொண்டுவந்த வீடியோக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிக்கதாம்பாளையம் கிராமத்தில் குடியரசு தினத்தை ஒட்டி கிராம சபை கூட்டம் வெள்ளிப்பாளையம் கிராமத்தில் நடந்தது.



இதற்காக பொதுமக்கள் அங்கு கூடியிருந்த நிலையில், ஆவணங்கள் சரிபார்ப்பு மற்றும் மக்கள் மன்றத்தில் வைக்கப்பட வேண்டிய ஆவணங்களை குப்பை அள்ளும் வாகனத்தில் கொண்டுவந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இந்த நிகழ்வை வீடியோவாகவும், புகைப்படமாகவும் எடுத்து இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். கிராம சபா கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய விபர மற்றும் பஞ்சாயத்து அலுவலக கோப்புகளை முக்கியமாக கருதாமல், ஒரு குப்பை என்ற எண்ணத்தில் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் இந்தச் செயலில் ஈடுபட்டார்களா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.



மேலும், கிராம சபை கூட்டத்திற்கு காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர் வராத நிலையில், வேறு வாகனங்கள் ஏதும் இல்லாத காரணத்தால் குப்பை அள்ளும் வாகனத்தில் பஞ்சாயத்து பதிவேடுகள் மற்றும் கோப்புகளை எடுத்து வந்ததாக ஊராட்சி அலுவலகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

ஏற்கனவே சிக்கதாசம்பாளையம் பஞ்சாயத்து அலுவலக செயல்பாடுகள் குறித்து மக்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறிவரும் நிலையில், கிராமசபா கூட்ட தினத்தன்று மக்கள் பார்வைக்கு வைக்க கோப்புகளை ஊராட்சி நிர்வாகத்தினர் அலட்சியமாக கையாண்டது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு கோப்புகளை பொறுப்பற்ற முறையில் இப்படி குப்பை வண்டியில் கொண்டுவந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...