கிணத்துக்கடவு அருகே ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல் - இளைஞர்கள் 2 பேர் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தேரோடும் வீதியில் கட்டப்பட்டிருந்த டியூப் லைட்டுகளை உடைத்ததை தட்டிக்கேட்ட ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்திய இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு தேரோடும் வீதியில் உள்ள ஆதிபராசக்தி கோவில் கும்பாபிஷேகத்திற்காக சாலையோரத்தில் டியூப் லைட்டுகள் கட்டப்பட்டிருந்தன.

அப்போது, அப்பகுதியில் குடிபோதையில் வந்த இரண்டு இளைஞர்கள், டியூப் லைட்டுகளை உடைத்துக் கொண்டு இருந்தனர். இதைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான ராஜன் என்பவர் அந்த இளைஞர்களை தட்டிக்கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், குடிபோதையில் ஆட்டோ ஓட்டுநர் ராஜன்மீது தாக்குதல் நடத்தினார். இதில், படுகாயம் அடைந்த ஆட்டோ ஓட்டுநரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



இது தொடர்பாக ராஜன் அளித்த புகாரின் பேரில் கிணத்துக்கடவு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார்,உதவி ஆய்வாளர் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்ட பெரியார் நகர் பகுதி சேர்ந்த ராஜ்குமார்(வயது 22) சுலைமான்(வயது 21) ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...